Categories
தேசிய செய்திகள்

திடீர் அறிவிப்பு!!…. இந்த தடுப்பூசி இந்தியாவில் பற்றாக்குறை இல்லை…. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை….!!!!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கரோனா தீநுண்மியைப்  போன்ற நிமோனியா கிருமி அல்லது தேன் தீநுண்மி தொற்று நுரையீரலில் ஏற்படுவதால் மூச்சுத் திணறல், காய்ச்சல் போன்ற பிரச்சனை உருவாகிறது. இந்த தொற்றை தடுக்கும் வகையில் நமது இந்தியா நிமோனியா என்று அழைக்கப்படும் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது. இந்த தடுப்பூசி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என இரு வகைகளாக அளிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும்  இத்த தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரதுறை  அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம்  தேதி வரை அனைத்து மாநிலங்களிலும்  போதுமான பிசிவி தடுப்பூசி உள்ளது. மேலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 70.18  லட்சம் இருபில் உள்ளது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3.01 லட்சம் டோஸ்கள் உள்ளது. இந்நிலையில் ஜனவரி முதல் செப்டம்பர் வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 3.27 கோடி டோஸ் பிசிவி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் நுரையீரல் அழற்சியான நிமோனியா தீநுண்மி  குழந்தைகள் இறப்பு விகிதத்திற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கும் என்பதால்  தீவிரமாக கவனத்தில் எடுத்து சொல்ல மத்திய அரசு இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் 2017-ஆம் ஆண்டு முதல் முறையாக 5 மாநிலங்களில் இந்த தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டு தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது பிறந்த குழந்தைகளுக்கு 6-வது, 14-வது மற்றும் 12 மாதங்களுக்குள் 3 தவணைகளில் இந்த தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக இது வழங்கப்படுகிறது என அறிக்கையில் கூறியுள்ளது.

Categories

Tech |