மேற்கு வங்காள கவர்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மேற்கு வங்காள மாநிலத்தின் கவர்னராக ஜகதீப் தன்கர் இருக்கிறார். இந்நிலையில் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பரிசோதனையில் அவருக்கு மலேரியா காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கவர்னர் ஜக்தீப் தன்கர்க்கு சிறப்பு டாக்டர்கள் கொண்ட குழு சிகிச்சை அளித்து வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.