தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குமாருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தையை குமார் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Categories