Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீர் எந்திரகோளாறு… “அதிஷ்டவசமாக 104 பேர் உயிர் பிழைப்பு”…. சுமார் 13 1/2 மணி நேரம் கழித்து புறப்பட்ட சிங்கப்பூர் விமானம் ….!!!!

சிங்கப்பூருக்கு செல்ல இருந்த விமானத்தில் திடீரென எந்திரகோளாறு ஏற்பட்டதை விமானி உடனே கண்டுபிடித்து நிறுத்தியதால் 104 பேர் உயிர் பிழைத்தார்கள்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு கடந்த 2ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு விமானம் ஒன்று கிளம்ப தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தில் 98 பயணிகள் 6 விமான சிப்பந்திகள் உட்பட 104 பேர்கள் இருந்தார்கள். பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி உட்கார்ந்து விமானத்தின் கதவுகளும் மூடப்பட்டுள்ளது. அதன் பிறகு விமானம் ஓடுபாதையில் ஓட ஆரம்பித்தது. அப்போது திடீரென்று விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்துள்ளார். உடனே விமானத்தை ஓடுபாதையிலிருந்து நிறுத்தி இது குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் அளித்தார்.

இதனை அடுத்து அந்த விமானம் இழுவை வாகனம் மூலம் இழுத்துக் கொண்டு வரப்பட்டு மீண்டும் நடைமேடையில் நிறுத்தப்பட்டுள்ளது. விமான எஞ்சினியர் குழுவினர் விரைந்து வந்து விமானத்துக்குள் ஏறி எந்திர கோளாறு பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அந்த விமானம் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இரண்டு மணி நேரம் ஆகியும் விமானம் பழுது பார்த்து முடியவில்லை.

இதன் காரணமாக நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் 4 மணிக்கும் கிளம்பவில்லை. இதனால் கோபம் அடைந்த பயணிகள் ஓய்வு அறைக்குள் விமான ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார்கள். அதன் பின் பயணிகள் அனைவருக்கும் டீ, காபி, சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பயணிகள் பலர் தங்களுடைய வீட்டிற்கு செல்வதாக கூறி வெளியே சென்றார்கள். சில பயணிகள் விமான நிலையத்தில் பரிதவித்து நின்றார்கள்.

சிங்கப்பூர் செல்ல இருந்த 98 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் பலமணிநேரம் அவதிப்பட்டார்கள். அதேசமயம் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானிகள் உடனே கண்டுபிடிக்கப்பட்டதால் பயணம் செய்த 104 பேரும் உயிர் பிழைத்தார்கள். அதன்பின் எந்திர கோளாறு சரி செய்யப்பட்டு சுமார் 13 1/2 மணி நேரம் தாமதமாக நேற்று காலை 11 மணி அளவில் விமானம் சிங்கப்பூருக்கு கிளம்பி சென்றுள்ளது.

Categories

Tech |