Categories
தேசிய செய்திகள்

விமான கட்டணம் திடீர் உயர்வு…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

விமான டிக்கெட் கட்டணத்தின் வரம்புகளை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனையடுத்து விமான டிக்கெட் கட்டணங்கள் விரைவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த வருடம் விமான போக்குவரத்துக்கு அரசு முழுமையாக தடை விதித்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் முதல் விமான டிக்கெட் கட்டணங்களுக்கு விமான பயண நேரத்தின் அடிப்படையில் வரம்புகளை இந்திய அரசு நிர்ணயித்தது.

அதன்படி, 40 நிமிடங்களுக்கு உள்ளான பயணம் ரூ.2900-ரூ. 8800, 40 முதல் 60 நிமிடங்கள் பயணம் ரூ.3700 -ரூ.11,000, 60 முதல் 90 நிமிடங்கள் பயணம் ரூ.4500-ரூ. 13200, 90 முதல் 120 நிமிடங்கள் பயணம் ரூ.5300, 120-150 நிமிடங்கள் பயணம் ரூ.6,700, 150-180 நிமிடங்கள் பயணம் ரூ.8,300, 18-200 நிமிடங்கள் பயணம் ரூ.9,800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Categories

Tech |