Categories
மாநில செய்திகள்

திடீர் கட்டுப்பாடு…. 3 நாள் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

கொரோனா பரவலை தடுக்க கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தடை விதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தபோது: “புத்தாண்டு தினத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

அவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மக்கள் அவரவர் வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையிலும் இன்றும் , நாளையும் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |