Categories
மாநில செய்திகள்

திடீர் கனமழை: முன்பே கணிக்க தவறியது ஏன்…? வானிலை மையம் விளக்கம்…!!!!

சென்னையில் நேற்று எதிர்பாராதவிதமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் ஒரு சில பகுதிகளில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதனால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மழை வருவதை முன்கூட்டியே ஏன் வானிலை மையம் கண்டிக்கவில்லை என்று கேள்வி எழுந்து வந்தது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றுதான் கனமழையை எதிர்பார்த்தோம். ஆனால் நிலப்பகுதியில் இருந்த மேலடுக்கு சுழற்சி கடலில் இருப்பதாக கணித்து விட்டோம். நிலப்பகுதியில் இருந்ததை கணிக்கத் தவறி விட்டோம். இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு இந்த அளவுக்கு தான் கணிக்க முடிகிறது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |