Categories
சினிமா தமிழ் சினிமா

திடீர் சோகம்: “மாரடைப்பால் மறைந்த பாலிவுட் நடிகர்”… இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்…!!

பாலிவுட் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அமிதாப் தயால் நேற்று காலை 4.30 மணியளவில் திடீரென வந்த மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

அமிதாப் தயால் என்பவர் பாலிவுட் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தவர். இவர் ரங்கதாரி உட்பட பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இதனையடுத்து இவருக்கு கடந்த 17ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அமிதாப் தயால் நேற்று காலை 4.30 மணியளவில் திடீரென வந்த மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருடைய இறப்பிற்கு பாலிவுட் பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவருடைய இறுதி சடங்கு மும்பையில் வைத்து நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |