செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ-வாக இருந்தவர் இதயவர்மன். இவரது தந்தை லட்சுமிபதி திமுகவின் முன்னாள் ஒன்றியக்குழு தலைவராக இருந்தவர். இவர்கள் குடும்பத்தாருக்கும் இதே பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது.
இந்நிலையில் செங்காடு கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் அருகே குமார் மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமான 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் உள்ளதாக தெரிகிறது.இந்த நிலத்துக்கு பாதையை அமைப்பதற்காக குமார் தரப்பினர் அருகிலுள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்க முயன்றுள்ளனர்.
இதனால் இவருக்கும் எம்.எல்.ஏ குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, பின் ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளதாக தெரிகிறது. இத்தாக்குதலில் கடந்த ஆண்டு திருப்போரூர் அருகே கோயில் நிலத்தில் சாலை அமைப்பது தொடர்பான மோதலில், திமுக முன்னாள் எம்எல்ஏ இதயவர்மனின் தந்தை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டது.இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நில விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தைதான் அணுக முடியும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.