பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று சென்னைக்கு வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரெயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று மாலை ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.
பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ளதையடுத்து அவரை விமர்சிக்க கூடாது என்று திமுகவினருக்கு திடீர் தடை விதித்துள்ளார். மீறி விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது #GoBackModi என்று ட்ரெண்டிங் செய்த திமுகவினர் தற்போது அமைதி காக்கின்றனர்.