தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் மற்ற கட்சியினரை விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மக்களிடையே நேரில் சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சசிகலா குறித்து முதல்முறையாக ஓபிஎஸ் மனம் திறந்து பேசியுள்ளார்.
அதாவது சசிகலா மீது எனக்கு ஆரம்பம் முதலே எந்த ஒரு வருத்தமும் இல்லை. ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது சிலர் சந்தேகம் எழுப்பினர். இதுபோன்ற பிரச்சனைகளால் சசிகலாவுக்கு கெட்ட பெயர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியது. எனவே நீதி விசாரணை நடத்தி அந்த அவப்பெயரை துடைக்க வேண்டும் என்று நினைத்து நீதி விசாரணை கேட்டேன். அவர் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.