Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீர் திருப்பம்…. டிடிவி யாருடன் கூட்டணி தெரியுமா…? – அதிரடி அறிவிப்பு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவிப்பை வெளியிட்டதால் மிகுந்த மனவேதனையில் இருந்தார் டிடிவி. அது ஒருபுறமிருக்க மறுபக்கம் அரசியலிலும் தீவிரமாக இறங்கி சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இதையடுத்து அமமுக – அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் இடையே கூட்டணி வைத்துள்ளது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமமுக கூட்டணியில் ஓவைசியின் கட்சி வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் பகுதியில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |