Categories
சினிமா தமிழ் சினிமா

திடீர் திருப்பம்: தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் இணைவார்களா…? கட்டமாக பேசிய ரஜினி…. கதறித் துடித்த மகள்…!!

கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷ் ஐஸ்வர்யா ஜோடிகள் சமீபத்தில் விவாகரத்து பெற போவதாக தெரிவித்துள்ள நிலையில் மன வேதனையிலிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி தனது மகளிடம் மிகக் கடுமையாகப் பேசியுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் சமீபத்தில் தாங்கள் விவாகரத்து செய்யப்போவதாக இருவரும் அறிவித்துள்ளார்கள்.

இதனால் ஆட்டம் கண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகுந்த மன வேதனையிலுள்ளார். அவரை சமாதானம் செய்ய ரஜினியின் மனைவி லதா முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை. இதனையடுத்து ஐஸ்வர்யாவிடம் பேச்சுவார்த்தையில் இருக்கும் லதா அவரை அப்பாவிடம் பேசுமாறு கூறியுள்ளார்.

அதன்படி ஐஸ்வர்யா தனது அப்பாவான ரஜினியிடம் போன் போட்டு நலம் விசாரித்துள்ளார். ஆனால் ரஜினி சரமாரியாக ஐஸ்வர்யாவை திட்டியுள்ளார். அதாவது உனது குழந்தைகளின் மீது கொஞ்சமாவது அக்கறையிருந்தால் இவ்வாறு நீ செய்வாயா என பல கேள்விகளை எழுப்பி மிகக் காட்டமாக பேசியுள்ளார்.

இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா தனது அம்மாவான லதாவிடம் போன் போட்டு அழுதுள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் ஜோடிகள் மீண்டும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே நடிகர் ரஜினி கவலையின்றி இருப்பார் என அவர்களுடைய நெருங்கிய சொந்தங்கள் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |