தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் திமுக ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பேரூராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 8 வார்டுகளில் திமுக நான்கு இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. பின்னர் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற இரு கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இதில் திடீர் திருப்பமாக இரண்டாவது வார்டு திமுக உறுப்பினர் ஆதரவுடன் அதிமுகவின் கணேஷ் தாமோதரன் பேரூராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்றார்.
Categories