தமிழக சட்டமன்ற தனது தொகுதியை மாற்றி வேறு தொகுதியில் போட்டியிட அமைச்சர் செல்லூர் ராஜு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் மத்திய ஆகிய நான்கு தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார். மதுரை மேற்கு தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற அமைச்சராக வலம் வந்த செல்லூர் ராஜூ, இந்த முறை போட்டியிட விருப்பமில்லை. மாறாக மதுரை தெற்கு, மதுரை வடக்கு மற்றும் மதுரை மத்திய தொகுதி ஆகிய மூன்றிலும் ஒன்றில் போட்டியிடுவதாக நேற்றைய நேர்காணலில் அவர் கூறியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.