தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் புதுச்சேரியில் தொகுதி ஒதுக்கீடு செய்யாவிடில் தனித்து போட்டியிட தயாராக இருப்பதாக திடீர் திருப்பமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் -திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட்க்கு தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் லாஸ்பேட்டை, திருபுவனை, பாகூர், டி.ஆர்.பட்டினம் தொகுதிகளில் தனித்து போட்டியிட தயாராக இருப்பதாக மாநில செயலாளர் ராஜாங்கம் அறிவித்துள்ளார்.