பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதாக ஜூன் 27ம் தேதி சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தார். சில ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் திடீரென திருமணம் செய்து கொண்டது குறித்து ஆலியா பட் மனம் திறந்துள்ளார்.
தான் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வந்ததால் தன்னை அதிலேயே இழக்க நேரிடுமோ என்ற பயத்தில் திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்ததாக ஆலியா பட் தெரிவித்துள்ளார். விரைவில் ஆலியா பட் தாயாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.