Categories
Uncategorized

திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான சரக்கு ரயில்…. ரயில் நிலையம் அருகே நடந்த பயங்கரம்….!!

ரயில் நிலையத்திற்கு அருகே வரும்போது சரக்கு ரயில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டன் கென்டில் உள்ள டன்டன் கிரீன் ரயில் நிலையத்திற்கு அருகே வரும்போது சரக்கு ரயில் ஒன்று தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 6 வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனிடையே தீ வேகமாக பரவியதால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்நிலையில் தீ எதனால் ஏற்பட்டது என்பது குறித்தும் காயமடைந்தவர்களின் நிலை குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளின் ஜன்னல் மற்றும் கதவுகளை அடைத்து வைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பாதையில் செல்லும் Orpington, Sevenoaks  ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் ரயில் சேவைக்கு பதிலாக பேருந்து சேவை இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |