Categories
உலக செய்திகள்

திடீர் நிலநடுக்கத்தால் நிலை குலைந்த ஆப்கான்…. இரங்கல் தெரிவித்த ஐ.நா வின் இந்திய பிரதிநிதி….!!

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  

ஆப்கானிஸ்தான் நாட்டில் மத்தியப்  பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 5.1 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. குறிப்பாக, பதிகா மாகாணத்தில் உள்ள கயான், பர்மாலா, நாக, ஜிருக் மற்றும் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஸ்பெரா மாவட்டங்கள் இந்த நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பயங்கரமான நிலநடுக்கத்தினால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளனர். மேலும் 2000 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த நிலநடுக்கத்தினால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகள், உணவு இன்றி பரிதவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலைகள் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தான் குறித்த பாதுகாப்பு கவுன்சில் மாநாடு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, “ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பேரழிவுக்கான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆப்கானிஸ்தான் மக்களின் துயரத்தை இந்தியா பகிரந்துக் கொள்கிறது. மேலும், இந்த நேரத்தில் உதவி மற்றும் ஆதரவை வழங்கவும் தயாராக இருப்பதாக” அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |