இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவாகியுள்ளது. இது மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம். அந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின. ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் என 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் கட்டிட இடிபாடுகளில் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் சிக்கியுள்ள பதைபதைக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த கோர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://youtu.be/biA8NpyJnLA