Categories
சென்னை மாநில செய்திகள்

திடீர் நெஞ்சுவலி… ஓட்டுநரின் துரித செயல்….. காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

ஓடும் பேருந்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையிலும் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு பேருந்து நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.சென்னையில் இருந்து திருவான்மியூர் சென்ற அரசு பேருந்தை ரவி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது பேருந்து அடையாறு அருகே சென்ற போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

அன்னை வேளாங்கண்ணி ஆலயம் திருப்பத்தில் அடையாறு நோக்கி திரும்பும் போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ரவி, கடும் வலிக்கு மத்தியிலும் பேருந்தை சாலையிலேயே நிறுத்தினார். இதைக் கண்டு பதறிய பயணிகளும் நடத்துநரும் ரவியை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Categories

Tech |