திமுக கட்சியின் எம்பி ஆ. ராசா இந்துக்கள் குறித்து பேசிய வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்து அமைப்பினர் ஆ. ராசாவை கண்டித்து நீலகிரி தொகுதி முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் கோவை, மேட்டுப்பாளையம், அன்னூர் போன்ற பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறு இந்து அமைப்பினரும் பாஜகவும் கூறினர்.
இதன் காரணமாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடைக்கடையாக சென்று போராட்டத்திற்கு யாரும் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்று துண்டு பிரசாரங்கள் விநியோகித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து அமைப்பினரும் பாஜகவினரும் கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறு கூறி துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர். இதனால் அப்பகுதியில் நேற்றே பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இன்று பாஜகவினரின் இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தினர்.
அப்போது சத்தியமங்கலம் பகுதியில் 1 டீக்கடை திறந்திருந்தது. இந்த கடையை மூட வலியுறுத்தி பாஜகவினர் கடைக்காரரை தொந்தரவு செய்கின்றனர். அப்போது நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி கடையை மூட சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று பாஜகவினர் பல்வேறு இடங்களில் கடைகளை மூட வலியுறுத்தி தொந்தரவு செய்வதாக இணையதளங்களில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது.
A video from Sathyamangalam in West TN. DMK councillor is being pressurised by the Hindu activists to shut shop. The Hindu Munnani, in Nilgiris, had called for a bandh condemning @dmk_raja 's comments.
The councillor is left to defend for herself. pic.twitter.com/ZKznnzmNlL— Lakshmi Subramanian (@lakhinathan) September 20, 2022