சென்னையில் இருந்து விமான மூலமாக இன்று காலை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் டெல்லிக்கு செல்லும் கவர்னர் ஆர்.என். ரவி இரண்டு நாட்கள் அங்கு இருப்பதாகவும், அதன் பின் மீண்டும் சென்னைக்கு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து டெல்லிக்கு செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி உள்துறை அதிகாரிகள் மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா போன்றோரை சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Categories