Categories
மாநில செய்திகள்

திடீர் போன்…. “ஹேப்பி கிறிஸ்மஸ்”…. தேங்க்யூ அங்கிள்…. நல்லா படி தைரியமா இரு…. டான்யாவிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்.!!

முக அறுவை சிகிச்சைக்காக இரண்டாவது முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி டான்யாவிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை அடுத்த தண்டலம் சவீதா மருத்துவமனையில் இரண்டாவது முறையாக முக அறுவை சிகிச்சைக்காக சிறுமி டான்யா அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சிறுமி நேற்று மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட நிலையில், இன்று காலை பால்வளத்துறை அமைச்சர் நாசர்  நேரில் சந்தித்து அவரிடம் நலம் விசாரித்து பேசினார்.

 

அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் செல்போன் மூலமாக அழைத்து அமைச்சர் நாசரிடம் சிகிச்சை குறித்து பேசினார். பின் டான்யாவின் உடல் நலம் குறித்தும், அவருக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார் மேலும் அவரது உடல் நலம் குறித்தும் விசாரித்தார்.

 

முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர் நாசர் போனில் பேசியதாவது, நான் ஹாஸ்பிட்டல்ல, ஸ்பாட்ல இருக்கேன். நேத்து அந்த பிள்ளைக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையாம், ரொம்ப ஹேப்பியா கொண்டாடுனாங்கலாம். இப்ப அங்க தான் அண்ணே இருக்கேன். இன்னும் ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு போகல சிறுமி பக்கத்துல இருக்கு  அண்ணே பேசுறீங்களா அண்ணே என கூறினார். பின் சிறுமியிடம் போனை கொடுத்து, சிஎம் பேசுறாங்க, பேசுமா என அமைச்சர் நாசர் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் –  சிறுமி டான்யா செல்போனில் பேசியதாவது,

ஸ்டாலின் : நல்லா இருக்கீங்களா

டான்யா : ஹலோ நல்லா இருக்கேன் அங்கிள். நீங்க எப்படி இருக்கீங்க

ஸ்டாலின் : நல்லா இருக்கேன், நல்லா இருக்கேன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்,

டான்யா : ஹேப்பி கிறிஸ்மஸ் அங்கிள், தேங்க்யூ.

ஸ்டாலின் : தைரியமா இரு சீக்கிரம் சிகிச்சை எல்லாம் முடிந்து விடும், நல்லா படி, ஸ்கூல் போறியா

டான்யா : இல்ல அங்கிள் வீட்டுக்கு வந்து இல்லம் தேடி கல்வி வந்து எடுக்குறாங்க.

ஸ்டாலின் : வீட்டில் இருந்து படிக்கிறியா.. சரி.. சரி.. தைரியமா இரு. அப்பா எங்க.

டான்யா : அப்பா இல்ல அங்கிள் இப்போ தான் வீட்டுக்கு போய் இருக்காரு.

ஸ்டாலின் : அம்மா இருக்காங்களா, அவங்ககிட்ட கிட்ட குடுங்க என சொன்னார்.

டான்யாவின் தாய் : வணக்கம் மா.. வணக்கம் ஐயா ரொம்ப நன்றி ஐயா என தெரிவித்தார்.

Categories

Tech |