Categories
மாநில செய்திகள்

திடீர் மாரடைப்பு…. 1 கி.மீ தூரம் மூதாட்டியை தூக்கி வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்…..!!!!

நேற்று மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு 60 வயது மூதாட்டி ஒருவர் தர்ப்பணம் கொடுப்பதற்காக தனது உறவினர்களுடன் மாமல்லபுரம் சென்றுள்ளார். அப்போது மூதாட்டிக்கு திடீரென கடற்கரையில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அதனால் பதறிப்போன உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்த நிலையில் ஆம்புலன்ஸ் கடற்கரைக்குச் செல்ல முடியாததால் நுழைவு வாயில் பகுதியிலேயே நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு 700 மீட்டர் தூரம் உள்ள மணல் பரப்பிலேயே மருத்துவ பணியாளர்கள் மூதாட்டியை தூக்கி வந்து, முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் மூதாட்டியை சுமந்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |