திருச்சி-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி ரெயிலில் பொதுப்பெட்டிகள் 2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெட்டிகள் இரு மார்க்கங்களிலும் ஒன்பது பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த ரயில் மூன்று பொது பெட்டிகள் 2ம் வகுப்பு இருக்கை வசதி முன்பதிவு பெட்டியாக மாற்றப்படுகிறது. அதன்படி திருச்சியில் இருந்து இயக்கப்படும் ரயிலில் வருகிற 19ம் தேதி முதலும், திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும் ரயிலை வருகிற 20-ஆம் தேதி முதலும் இந்தப் பெட்டிகள் மாற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்த ரயிலில் இனிமேல் ஒரு குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி பெட்டி 8 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள், 8 பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுடன் கூடிய பார்சல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.