Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி மாவட்ட செய்திகள்

திடீர் மின்கட்டணம் உயர்வு… பாஜக அரசு ஆதரவு…!!!!!

நாடு முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி பாஜக தொடக்க நாள் மற்றும் சாதனை நாள் விழா விழா நடைபெற்றுவருகிறது. அன்றைய தினம் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தொண்டர்களுடன் பேசயிருக்கிறார். இதற்காக புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் பாஜக நிர்வாகிகள் பிரதமரின் உரையை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் சந்தித்த பாஜக மாநில தலைவர் சாமிநாதன் பேசியபோது, நாடு முழுவதும் முதன் முறையாக ஏப்ரல் 16-ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி விழா பாஜக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் அம்பேத்கர் படத்தை வைத்துக் கொண்டாட  இருக்கிறோம். மேலும் ஏப்ரல் 17ஆம் தேதி வரை மருத்துவ முகாம்கள், குளங்கள், ஏரிகள் தூர் வாரும் பணி, சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துவது போன்ற பணிகள் நடத்த இருக்கிறோம். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். புதுச்சேரியில் எதிர்காலத்தில் பாஜக வலுவாக கட்சியாக உருவெடுப்பதற்கு பல்வேறு வழிகளில் கட்சி நிர்வாகிகள் களப்பணி ஆற்றி வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தை  பொறுத்த வரையில் பெரிய அளவில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 30 முதல் 40 காசுகள் தான் உயர்த்தி இருக்கிறார்கள்.

இதையும்,பொதுமக்கள் பாதிக்காத வகையில் பாஜக சார்பில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் முறையிடுவோம் என மின் கட்டணம் உயர்வு குறித்து பரிசீலிக்கவும் வலியுறுத்துகிறோம். முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக சொல்லி இருப்பது எந்தவகையில் உண்மை உள்ளது என தெரியவில்லை. இது என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு இதனை தவிர்ப்பதற்கு அவசியமில்லை. அரசியல் செய்ய எதுவும் இல்லாததால் அரசின் மீது நாராயண சாமி பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்  என சாமிநாதன் கூறியுள்ளார்.

Categories

Tech |