Categories
ஆட்டோ மொபைல்

திடீர் விலை உயர்வு…. ஹூண்டாய் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….!!

Hyundai இந்தியா நிறுவனம் தனது கிராண்ட் i10 நியோஸ், i20, வெர்னா, i20 N லைன், வென்யூ மற்றும் கிரெட்டா மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட் பொருத்து மாறுபடும். Hyundai கிராண்ட் i10 நியோஸ் மாடலின் விலை தற்போது ரூ.6 ஆயிரம் வரை அதிகரித்துள்ள நிலையில் கிராண்ட் i10 நியோஸ் மாடலின் டீசல் என்ஜின் வேரியண்ட்களின் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் Hyundai ஆரா மாடல் விலையும் உயர்த்தப்படவில்லை. மிட்-சைஸ் செடான் மாடல் வெர்னா விலை ரூ. 3,000 உயர்த்தப்பட உள்ளது.

இந்த விலை பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் வேரியண்ட்களுக்கு மட்டும் பொருந்தும். இதனையடுத்து diesel வேரியண்ட்களின் விலை ரூ. 8,000 உயர்த்தப்பட்ட நிலையில் Hyundai வென்யூ diesel மற்றும் கிரெட்டா diesel மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. கிரெட்டா டீசல் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 3,000 , வென்யூ காம்பேக்ட் எஸ்யுவி diesel மாடல் விலை ரூ. 5,000, டாப் எண்ட் வேரியண்ட்களின் விலை ரூ. 6,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. Hyundai i20 மாடலின் விலை ரூ. 9,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |