ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி உள்பட சில மாவட்டங்களில் பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் கோதாவரி ஆற்றில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சீதா நகரம் புருஷோத்தம்பட்டினத்தில் ஆற்றங்கரையோரம் அமைந்திருந்த பிரசிக்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் ஆற்றில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.
இதனை அடுத்து கோவில் நிர்வாகிகள், மக்கள் யாரும் கோவிலில் இருக்க வேண்டாம் உடனடியாக வெளியேறும்படியும் எச்சரிக்கை விடுத்தனர். அந்த கோவில் சரிந்து, நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டது. இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.