கர்நாடக அரசு கட்டியுள்ள யார்கொள் அணையின் கட்டுமானப் பணிக்கு தமிழகத்திலிருந்து 25 நிறுவனங்கள் உதவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக சேலத்தை தலைமை இடமாக கொண்ட பிரபலமான நிறுவனம் ஒன்று தான் அந்த அணையின் கட்டுமானப் பணிக்கு எம்சாண்ட் சப்ளை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த அணையை கட்டுவதற்கு தமிழகத்தில் இருந்துதான் தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.மேலும் ஓசூர், தளி, கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து ஜல்லி, சிமென்ட், கம்பிகள் சென்றுள்ளது என்று கூறப்படுகின்றது.