நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் திட்டமிட்டபடி ஜூலை 19ஆம் தேதி மற்றும் 22ம் தேதிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். அனைவருடன் கலந்து ஆலோசித்த பிறகு மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் வணிக வளாகங்கள், மாலைகளை திறப்பது குறித்து ஜூலை 5ஆம் தேதிக்கு பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.