டிஜிட்டல் வானொலி ஒளிபரப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லாமல் இந்தியை திணிக்க பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அகில இந்திய வானொலியின் சென்னை பிரிவில் முழுக்க முழுக்க இந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. தமிழ் நிகழ்ச்சிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இது திட்டமிட்ட இந்தி திணிப்பு. DRM எனப்படும் டிஜிட்டல் வானொலி இன்றைய உலகின் நவீன தொழில்நுட்பம். இந்த அதிசய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் நிகழ்ச்சிகளை உலகம் எங்கும் கொண்டு செல்லாமல் இந்தியை திணிக்க பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதனை நிறுத்திவிட்டு இனி முழுக்க முழுக்க தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ் செய்திகளை டிஜிட்டல் முறையில் துல்லியமாக ஒளிபரப்ப சென்னை வானொலியும், பிரசார் பாரதியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.