Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திட்டிய கவுன்சிலரின் கணவர்…. போலீசாருடன் தகராறு…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

கவுன்சிலரின் கணவர் காவல்துறையினருடன் தகராறு செய்வது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் 51-வது வார்டு மாமன்ற கவுன்சிலராக இருப்பவர் நிரஞ்சனா. இவருக்கு ஜெகதீசன் என்ற கணவர் உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் ஜெகதீசன் தனது ஆதரவாளர்களுடன் ராயபுரம் ஜே.பி., கோவில் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் கும்பலாக நிற்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஜெகதீசனும், அவரது ஆதரவாளர்களும் காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினரை தி.மு.க நிர்வாகி ஜெகதீசன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார் எழுந்துள்ளது. இதனால் கழக கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |