விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் தி.மு.க எம்.எல்.ஏ.வும் அவரது கணவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் சீதாபதி சொக்கலிங்கம். 65 வயதான இவர் திமுக எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருகிறார். இவர் கணவர் பெயர் சொக்கலிங்கம் ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார். கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அறிகுறிகளான இருமல் ,சளி உள்ளிட்ட பிரச்சனைகள் இருவருக்கும் இருந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பரிசோதனையை மேற்கொண்டனர்.
இதையடுத்து நேற்று வந்த முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து மேல்மருவத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விழுப்புரத்தில் ஏற்கனவே செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ ,வானுர் சக்கரபாணி எம்.எல்.ஏ ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர் என குறிப்பிடத்தக்கது.