திண்டிவனத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் விடிய கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ள நீர் கால்வாய்கள் மற்றும் நீர் நிலைகளில் கலந்ததால் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் கிடங்கள்-1 ஏரி நிரம்பியது. இதனால் உபரி நீர் அருகே உள்ள மேம்பாலத்தில் திறந்துவிடப்பட்டது. இந்த உபரி நீரால் மேம்பாலம் முழுவதும் வெள்ளம் பாய்வது போல் காட்சியளித்தது.
தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வந்ததால் அதிக அளவில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து திருப்பதி வந்த அரசு பஸ் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டது. 6 பயணிகளுடன் வந்த அந்த பஸ்சை டிரைவர் இயக்க முடியாமல் சிரமப்பட்டார் . இதனால் வெள்ளத்தில் சிக்கி மீளமுடியாமல் முடியாமல் தவித்து வந்த நிலையில் டிரைவர் மற்றும் கண்டக்டர் உட்பட 8 பேரை தீயணைப்பு படையினர் மீட்டு வேறு பஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி அந்த பஸ் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.