Categories
மாநில செய்திகள்

திண்டிவனம் ராமமூர்த்தி மறைவு…. முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி…..!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். திண்டிவனம் ராமமூர்த்தி 1981 முதல் 84ம் ஆண்டு வரையில் தமிழக எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1984 முதல் 1990 வரை மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தவர். தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.

அதன் பிறகு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.இதையடுத்து சென்னை அருகே உள்ள பனையூர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் சில தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Categories

Tech |