திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட உள்ள இறுதிகட்ட வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் மார்ச் மாதம் 12-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து கடந்த 20-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழனி, திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர், வேடசந்தூர் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளில் 186 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் மனு பரிசீலனையில் 148 பேர்களுடைய வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சுயேச்சைகள், மாற்று வேட்பாளர்கள் உட்பட 38 பேர்களுடைய வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தே.மு.தி.க., அ.தி.மு.க., தி.மு.க., பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் அந்தக் கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்கப்பட்டது. மேலும் அங்கீகரிக்கப்படாமல் உள்ள கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், சுயேச்சைகளுக்கும் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள சின்னங்கள் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 6 பேர் தங்களுடைய வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர். இந்நிலையில் 14 பேர் இறுதிகட்ட வேட்ப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டனச்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் கட்சி பற்றிய விவரம் பின்வருமாறு;-
1. அர.சக்கரபாணி- (தி.மு.க.)
2. ரவி- (அனைத்து மக்கள் புரட்சி கட்சி)
3. சிவனேசன்- (சுயேச்சை)
4. நடராஜ்- (அ.தி.மு.க.)
5. மாரிமுத்து- (சுயேச்சை)
6. அப்துல்ஹாதி- (மக்கள் நீதி மய்யம்)
7. சிவபிரகாஷ்- (சுயேச்சை)
8. சக்திதேவி- (நாம் தமிழர்)
9. சண்முகவேல்- (சுயேச்சை)
10. சிவகுமார்- (தே.மு.தி.க.)
11. முருகராஜ்- (பகுஜன் சமாஜ்)
12. செல்லமுத்து- (சுயேச்சை)
13. ரவிச்சந்திரன்- (மை இந்தியா கட்சி)
14. பாலசுப்ரமணி- (சுயேச்சை).