Categories
மாநில செய்திகள்

திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கு… உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு… தமிழக அரசு அதிரடி…!!!

திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள குரும்பபட்டி என்ற பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த செப்டம்பர் 29-ம் தேதி இந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. விசாரணையில் போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த கிருபானந்தன் என்ற நபரை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுமியின் குடும்பத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கத்தினர் ஒன்றிணைந்து மாநில அளவில் முடி திருத்தும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் அந்த வழக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது.

 

Categories

Tech |