Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திண்ணையில் அமர்ந்திருந்த தொழிலாளி…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ்காரர் கைது…!!

கார் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள வளசரவாக்கம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜெ.ஜெ நகர் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித்குமார் தனது நண்பரான மணிகண்டன் என்பவருடன் காரில் விருகம்பாக்கம் தேவி கருமாரி அம்மன் கோவில் தெரு வழியாக சென்றுள்ளார். இதனையடுத்து கோவிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தை வாங்கிக்கொண்டு அந்த வழியாக சிறுவர்கள் சிலர் ஓடி சென்றுள்ளனர். இதனை பார்த்ததும் சிறுவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக ரஞ்சித்குமார் காரை திருப்பியுள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த கட்டிட தொழிலாளியான சங்கர் என்பவர் மீது மோதியதால், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரஞ்சித் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |