அன்னாசிப் பழம் கேசரி செய்ய தேவையான பொருள்கள் :
அன்னாசிப் பழம் – 1 பாகம்,
ரவை – 2 கப்,
சர்க்கரை – 3 கப்,
நெய் – 1/4 கப்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
அன்னாசி எசன்ஸ் – 2 டீஸ்பூன்,
கலர் பவுடர் – அரை டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு – 8
முதலில் அன்னாசிப் பழத்தை தோல், முள் நீக்கி பொடியாக நறுக்குங்கள். அதனுடன் சர்க்கரை கலந்து, அரை மணி நேரம் வையுங்கள். ரவையை 2 டீஸ்பூன் நெய் சேர்த்து வறுத்தெடுங்கள்.
அதன் பின் மீதமுள்ள நெய், எண்ணெயை காய வைத்து முந்திரிப்பருப்பைப் போட்டு தாளித்து, 3 கப் தண்ணீர் சேருங்கள்.
பின்பு அதில் மஞ்சள் கலர் சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் வறுத்த ரவையைச் சேர்த்து கட்டி படாமல் கிளறுங்கள்.
பிறகு நன்கு கிளறியபின், தீயைக் குறைத்து 5 நிமிடம் நன்கு வேகவிடவேண்டும் . பின்னர் அன்னாசி, சர்க்கரை கலவையையும் அதில் சேருங்கள். இது சற்று இளகி, மீண்டும் கெட்டிப்படும்.
அடுத்தது அதை நன்கு கிளறி, எசன்ஸ் சேர்த்து கலந்து பரிமாறுங்கள். சுவையான அன்னாசி கேசரி தனியார்.