கரும்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் .
பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது கரும்புதான் .அப்படிப்பட்ட சுவையான கரும்பு தேனி மாவட்டம்,பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது .பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் போதிய மழையால் தற்போது கரும்புகள் அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் இருக்கின்றன .
கடந்த ஆண்டு 10கரும்புகள் கொண்ட 1கட்டு 300ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலையில்,இந்த ஆண்டு 400ரூபாய்க்கு மேல் 1கட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .