தித்திப்பான எள்ளு உருண்டை செய்வது எப்படி:
தேவையான பொருட்கள் :
எள்ளு – 200 கிராம்,
வெல்லம் – 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
நெய் – 3 டீஸ்பூன்.
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றாமல் எள்ளை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும்.
பின்பு வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டிய பின் மீண்டும் கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு, உருட்டினால் உருட்ட வர வேண்டும். அதுதான் பாகுக்கு சரியான பதம்.
அதனை தொடர்ந்து பதம் வந்ததும் வறுத்த எள்ளுடன் பாகு சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, சற்று சூடாக இருக்கும் போதே கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு உருட்டவும். சுவையான தித்திப்பான எள்ளு உருண்டை ரெடி.
குறிப்பு:
வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு எள் மிகவும் நல்லது. இதை கருப்பு எள், வெள்ளை எள் இரண்டிலும் செய்யலாம்.