1989 ஆம் வருடம் வெளியான புதிய பாதை என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். தன்னுடைய படங்களில் வித்தியாசமான புது முயற்சிகளை செய்தும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். இந்த நிலையில் இவரின் சமூக வலைதள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில் இன்று மாலை ஆண்களில் ஷாருக்கான்.. பெண்களில் கத்ரீனா கைப் இருவரையும் பிரமிக்க செய்து கொண்டிருப்பவரை சந்தித்தேன். மேலும் நேசிக்கும் கிளியும், வாசிக்கும் பியானாவும், யோசிக்கும் புதிய மார்க்கமாய் கண்டு ரசித்தேன் ரம்யமாய்! கமல் சார் செங்கடல் என்றால் இவர் கருங்கடல். கடலாய் இவருக்கு மேல் அறிவின் அலை கரை நிள்கின்றது. பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன் நேசிக்க விரும்புபவர்களை நெருங்க கூடாது என்பார்கள். மேலும் நெருங்கிய பின்னும் அதிநேசம் கொள்பவராய் இருந்தார் தித்திப்பின் சுவை நாவில் சந்திப்பின் தித்திப்பு அதை அசைபோடுகையில் என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டு விஜய் சேதுபதியும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.