Categories
அரசியல் மாநில செய்திகள்

தினகரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….? வேட்புமனு தாக்கலில் வெளியான தகவல்…!!

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் தினகரன் தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதனிடையே அனைத்து கட்சியினரும் வேட்புமனுவில் தங்களது சொத்து விவரங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த வேட்பு மனுவில் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு? என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி அவரது பெயரில் ரூ.19,18,485 மதிப்பில் அசையும் சொத்து இருப்பதாகவும், ரூ. 57,44000 மதிப்பில் அசையா சொத்து இருப்பதாகவும், தன்னுடைய மனைவி பெயரில் ரூ. 7,66,76,730 மதிப்பில் அசையும் சொத்து இருப்பதாகவும், ரூ.2,43,76,317 மதிப்பில் அசையா சொத்து இருப்பதாகவும், மேலும் அவருடைய மகள் பெயரில் ரூ. 12.16 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாகவும் தினகரன் வேட்பு மனுவில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தன் மீதான அந்நிய செலவாணி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதம் உட்பட  51,32,17,403  ரூபாய் அரசுக்கு நிலுவையில் இருப்பதையும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |