நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.8781.30 கோடி நிகரலாபம் ஈட்டி உள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய காலத்தில் அதன் நிகர லாபம் ரூ.4916.59 கோடியாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இரு மடங்காக அதன் லாபம் உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையே.