நம் உடலையும் மனதையும் எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா பெரிதும் உதவுகிறது. இதனை சிறியவர்கள் முதல் பெரியோர் வரை அனைவரும் தினமும் செய்து வரலாம். அப்படி தினமும் காலை யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இதில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். உடல், மனம், அறிவு, உணர்வு ஆகிய அனைத்தையும் ஒரு நிலைப்படுத்தும் ஒரு கலையாக யோகா கலை பார்க்கப்பட்டு வருகிறது. இந்த யோகக் கலையினை தினமும் காலை செய்து வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
தினமும் தவறாமல் யோகா செய்வது சுவாச குழாய் மற்றும் நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனைகளை தடுக்கப் பெரிதும் உதவுகின்றது. அவ்வகையில் ஆஸ்துமா பிரச்சனையை தடுப்பதற்கு யோகா ஆசனங்கள் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் யோகா ஆசனங்களை தினமும் செய்து வந்தால் தசைகள் அனைத்தும் தளர்வடைந்து. உடல் உள் உறுப்புகளின் செயல்பாடும் மேம்படுகின்றது. தினந்தோறும் தவறாமல் யோகா செய்வதால் தசைகளுக்கு கிடைக்கும் தளர்வு நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கும்.
குறிப்பாக தினமும் யோகா செய்வதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். யோகா செய்வதால் ரத்த தமனிகளில் ஏற்படும் தளர்வு சீரான ரத்த ஓட்டத்திற்கு வழி வகுக்கும். இந்த சீரான ரத்த ஓட்டம் சீரான இதயத் துடிப்புக்கும் வழி வகுப்பது மட்டுமல்லாமல் மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு போன்ற பிரச்சினைகளை வராமல் தடுக்கப் பெரிதும் உதவுகிறது.யோகா குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வுகளின் படி இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் நீரிழிவு பிரச்சனையை தடுப்பதற்கு யோகா ஒரு சிறந்த மருந்து.
யோகா செய்து வந்தால் உடலில் நிகழும் ரத்த சுத்திகரிப்பு பணி நீரிழிவு பிரச்சனையை தடுப்பதாக ஆய்வு கூறுகின்றது. மேலும் யோகா ஆசனங்களை தினமும் செய்து வருவதால் உடல் உள்ளுறுப்புகளில் நிகழும் மெய்நிகர் மாற்றம் பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கு உதவியாக இருக்கும். உங்களின் முதுமை தோற்றத்தை தடுக்கும் என்றும் இளமையாக இருக்க யோகா உதவும். மூளையின் செயல்பாடு அதிகரிக்க யோகா செய்வது நல்லது.
தினமும் யோகா செய்வதால் நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக செயல்படும்.தினமும் காலை யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து வந்தால் உடலில் சீராகும் ரத்த ஓட்டம் நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கு வழிவகுத்து உங்களின் மூளை செயல்பாட்டை மேம்படுத்த உதவும். தினமும் தவறாமல் யோகா ஆசனங்களை செய்து வந்தால் தசைப்பிடிப்பு மற்றும் உடல்வலி போன்ற எந்த பிரச்சனைகளும் வராது. யோகா செய்கையில் உடல் தசைகளில் ஏற்படும் தளர்வுகள் அந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக அமைகின்றது.
குறிப்பாக தினசரி யோகா செய்வதால் உடல் பருமன் குறைவது மட்டுமல்லாமல் உடலில் சேரும் தேவையற்ற கெட்ட கொழுப்புகளை கரைகின்றன. எனவே ஆரோக்கியமான உடல் எடை குறைப்பை விரும்புவோர் தினமும் தவறாமல் யோகாசனங்களை செய்து வந்தால் மட்டுமே போதும். இப்படி உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் யோகாசனங்களை தினமும் தவறாமல் செய்து பாருங்கள்.