Categories
Tech டெக்னாலஜி

தினசரி UPI டிரான்ஸாக்ஷன் லிமிட்…. முடிந்து விட்டால் என்ன செய்வது?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நடக்கக்கூடிய மோசடிகளை தவிர்ப்பதற்காக என்சிபிஐ யூபிஐ டிரான்ஸாக்ஷன்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. நாளொன்றுக்கு ரூபாய்.1 லட்சத்துக்கும் மேல் யூபிஐ வாயிலாக டிரான்ஸாக்ஷன்கள் செய்துகொள்ள இயலாது. அனைத்துவித யூபிஐ செயலிகளிலும் நாளொன்றுக்கு அதிகபட்சம் 10 டிரான்ஸாக்ஷன்களை மட்டுமே செய்ய முடியும்.

அதேபோன்று ஒருவரிடமிருந்து யூபிஐ வாயிலாக ரூபாய்.2,000க்கு மேல் பணம் கேட்க இயலாது. உங்களது டிரான்ஸாக்ஷன் லிமிட் முடிந்து விட்டால் நீங்கள் மறுபடியும் டிரான்ஸாக்ஷன் செய்ய மறுநாள் வரை காத்திருக்கவேண்டும்.  டிரான்ஸாக்ஷன் லிமிட் முடிந்து விட்டால் வேறு வங்கி கணக்கை பயன்படுத்தி டிரான்ஸாக்ஷன்கள் செய்யலாம் (அ) NEFT, நெட் பேங்கிங் ஆகிய பிற ஆன்லைன் கட்டண அம்சங்களை பயன்படுத்தலாம்.

Categories

Tech |