ரயில் விபத்துகள் தினந்தோறும் பல்வேறு இடங்களில் நடக்கிறது. இந்த ரயில் விபத்துகளினால் ஏராளமான மனிதர்கள் மற்றும் விலங்குகள் இறக்கின்றனர். இந்நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் நின்று கொண்டிருக்கும்போது ரயில்கள் எதற்காக பிரேக் போட்டு ரயில்களை நிறுத்துவதில்லை என்பதற்கான காரணம் தெரியுமா? அதாவது பொதுவாக ரயில்கள் 100-ல் இருந்து 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். அதன்பிறகு ரயில்களை திடீரென பிரேக் போட்டு நிறுத்த முயற்சி செய்தால் தண்டவாளத்தில் இருந்து ரயில் கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து நேர்ந்து விடும். இதனையடுத்து ரயிலை பிரேக் போட்டு நிறுத்தினால் கூட 600 லிருந்து 700 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தான் நிற்கும்.
இதனால்தான் தண்டவாளத்தில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் நின்று கொண்டிருந்தால் கூட ரயில்கள் அவர்கள் மீது மோதி விட்டு சென்று விடுகிறது. மேலும் ரயில்கள் தண்டவாளத்தில் சென்று கொண்டிருக்கும்போது தண்டவாளத்தில் யாரேனும் நின்று கொண்டிருந்தால் ஓட்டுநர்களுக்கு அவர்கள் நிற்பது தெரியாது. மேலும் ரயில்வே விபத்துக்களை தடுப்பதற்கான ஒரே வழி ரயில்கள் தண்டவாளத்தில் சென்று கொண்டிருக்கும்போது அதன் சத்தத்தைக் கேட்டு நாமாக தண்டவாளத்திலிருந்து சென்றால் மட்டுமே விபத்திலிருந்து தப்பிக்க முடியும்.