உத்திரபிரதேசம் மாநிலத்தில் மாவ் என்ற மாவட்டத்தை சேர்ந்த ராம் பிரவேஷ் என்பவருக்கும் அவரின் மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சண்டையில் மனைவிக்கு கோபம் அதிகமானால் கடுமையாக அடித்து உதைத்துள்ளார். குடும்பத்தில் இதெல்லாம் சகஜம் என்று ஆரம்பத்தில் பொறுத்துப்போன ராம் பிரவேஷ், காலம் செல்ல செல்ல அவரால் அடி தாங்க முடியவில்லை. இதனால் மனைவிக்கு பயந்து பனை மரத்தின் மீது வீடு போன்ற அமைப்பைக் கட்டி வாழ்ந்து வருகின்றார்.
அவர் பனை மரத்தின் வீட்டில் இருக்கும்போது அவரின் குடும்பத்தினர் உணவுப் பொருட்களை கயிற்றில் கட்டி அனுப்புகின்றன. கிட்டத்தட்ட அவர் ஒரு மாதமாக பனை மரத்தில் வாழ்ந்து வருகிறார். கீழே இறங்கச் சொல்லி பலரும் கூறி அவர் இறங்கவில்லை. ஒருவேளை யாராவது கட்டாயப்படுத்தினால் அவர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் போலீசில் தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீடியோ எடுத்தனர். மேலும் இந்த பிரச்சனைக்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.