நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண தினமும் நட்ஸ்களை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நம் அன்றாட வாழ்வில் நட்ஸ்களை சேர்த்துக் கொள்வதன் மூலமாக அவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோயால் ஏற்படும் மரணத்தின் ஆபத்தை குறைக்க உதவுகிறது. அவ்வாறு நர்ஸ் வகைகள் இதய ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். பிஸ்தாவில் உள்ள கலோரிகள் அனைத்தும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதனால் மாலை நேரத்தில் பசி எடுக்கும்போது பிஸ்தாவை ஒரு கையளவு சாப்பிடுங்கள்.
அதனால் பசி அடங்கி இதயம் ஆரோக்கியமாக இருக்கும். பாதாமை அன்றாட வாழ்வில் சேர்ப்பது வீக்கத்தை குறைக்கும். இது உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளவும் உதவும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வேர்கடலையில் கொழுப்பை குறைக்கும் சத்து அதிகமாக உள்ளது. அதனால் இதை தினமும் சாப்பிடலாம். பூசணி விதைகள் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது. இதய நோய்கள் ஒவ்வொருவருக்கும் வருவதற்கு மன அழுத்தமும் ஒரு முக்கிய காரணம்.
அதனால் பூசணி விதை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆளி விதைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் திறனைக் கொண்டது. சியா விதைகள் கொழுப்பு அமிலங்கள் அளவை குறைக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக ரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்கிறது. கெட்ட கொழுப்புகளை குறைக்கும்.